கணினி, மடிக்கணினி, கைப்பேசி என எல்லா மின்னியல் கருவிகளிலும் அழிவி(virus) ஊடுருவல் நிச்சயமாக உண்டு. நம்மில் பலர் 'micrsoft windows' எனும் செயலியையே பயன்படுத்துகிறோம். அதனால் இந்த அழிவிகளின் தாக்குதல்கள் நிச்சயம் உண்டு. அதைத் தடுக்க மிகச் சிறந்த அழிவி தடுப்பி (anti virus)தேவையாகிறது. அழிவி தடுப்பி இல்லாமல் இணையத்தில் ஒரு மணி நேரம் உலாவினாலும் நம் கணினி முற்றிலும் செயல் இழந்து போகும் வாய்ப்பு உண்டு.
அழிவி தடுப்பி நிரலிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 'Kaspersky' நிருவனம் அண்மையில் அவர்களின் புதிய நிரலியைச் சந்தையில் அறிமுகம் செய்தது. இது தங்கள் கணினியின் பாதுகாப்பை 100%ற்குக் காக்கும் என்பதை உறுதியளிக்கிறது. இதன் பெயர் 'Kaspersky PURE' என்பதாகும்.அழிவி பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, கடவுச் சொல் பாதுகாப்பு என பல்வகை சிறப்புக் கூறுகளை அடக்கியுள்ளது. சுருக்கமாக இப்படி அமைகிறது.
+
=
விலை= 3 கணினி + ஓர் ஆண்டு = RM 318.88.
இதைப் பதிவிறக்கம் செய்து 30 நாட்களுக்கு இலவயமாகப் பயன்படுத்தலாம். இதற்கு முன் 'அவிராவின்' இலவய அழிவி தடுப்பியைப் பயன்படுத்தினேன். மிகக் கொடிய அழிவி தாக்குண்ட போழ்து 'அவிரா' தன் குடையை மடக்கிக்கொண்டது. பின் என் கணினி செயலிழப்பிலிருந்து 'கசுபெர்சுகாய் பியோ' வே காப்பாற்றியது.
30 நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு இச் செயலி தங்களுக்கு நிறைவளிக்குமாயின் பணம் செலுத்தி இதை வாங்கிக் கொள்ளலாம். 30 நாளுக்குப் பிறகும் இச் செயலி(trial version) முழுமையாக இயங்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து இச் செயலியை மேம்படுத்துவதிலிருந்து (update) தவிர்க்கப்படுவீர். இருப்பினும் 30 நாளுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் 30 நாளைப் புதுபிக்கும் வழியும் உண்டு. மிக அவசியம் நேர்ந்தால் இதைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment