1.பள்ளித் தொடக்கம்
1.1 தொடங்கிய ஆண்டு 1957
1.2 மாணவர் எண்ணிக்கை ஏறத்தாழ 100 பேர்
1.3 ஆசிரியர் எண்ணிக்கை 7 பேர்
1.4 இடம் 3.5 ஏக்கர் நிலப்பரப்பு அளவுடையது. தோட்ட நிலம்.
2. தற்போதைய நிலை:
2.1 தலைமயாசிரியர் பெயர் : திரு: இர. முனுசாமி
2.2 மாணவர் எண்ணிக்கை : 8 பேர்
2.3 ஆசிரியர் எண்ணிக்கை 7 பேர்
2.4 கட்டட அமைப்பு : புதிய கட்டடம். 1986ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
2.5 5 ஏக்கர் நிலப்பரப்பு. 30 ஆண்டுக்கு ஒப்பந்தமுறை
2.6 7 வகுப்பறை
2.7. ஒரு சிற்றுண்டிச்சாலை
2.8 அழகிய கச்சிதமான வளாகம். பெரிய தோட்டத் திடலும் பக்கத்தில் உள்ளது
3. பள்ளியின் தற்போதைய செயல்திட்டங்கள்:
3.1 கல்வி: கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து யு.பி.எசு.ஆரில் தேர்ச்சித்தரம் நிலைபெற்றதாக உள்ளது. தோல்வியுற்றதில்லை.
3.2 சிறிய பள்ளியானாலும் ஏற்புடைய விளையாட்டுகளிலும் பிறவற்றிலும் கலந்து வெற்றியும் பெற்றுள்ளது. அதிகமான வாசிப்பு, ஓட்டப்போட்டிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
4. பள்ளியின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள்.
4.1 கட்டட அமைப்பு
4.1.1 வாசிப்புக் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி முழுவதும் தனியாள் மற்றும் பெற்றோர்களின் உதவியோடு சாயம்பூசி மெர்குபெற்று விளங்குகிறது.
4.1.2 விளையாட்டுக் களரி(கோர்ட்) அமைக்கப்படவுள்ளது.
4.2 கல்வி
4.2.1 வணக்கம் செர்சோனிஸ் சந்திப்பு நிகழ்ச்சி.
4.2.2 மாவட்ட அளவில் வாசிப்புப் போட்டியில் வெற்றிபெறுதல்.
4.2.3 100% யு.பி.எசு.ஆர் தேர்ச்சி பெறுதல்.
4.3 இணைக்கல்வி
4.3.1 மாவட்ட மாநிலப் போட்டிகளில் குறிப்பாக மலாய் மற்றும் தமிழ்ப்பேச்சுப்போட்டிகளில் முதல்நிலை பெறுதல்.
4.3.2 சீருடை இயக்க விருதுகள் பெறுதல்.
4.3.3 விளையாட்டுகளில் பள்ளிக்கு இருந்த பழயை புகழை மீண்டும் கொண்டு வருதல்.
5. பள்ளியின் மேன்மை — சிறப்பு
5.1 கடந்த கால வெற்றிகள்:
5.1.1 காற்பந்து ஆட்டத்தில் இப் பள்ளி பெறும்பாலும் முதல்நிலையிலேயே விளங்கியுள்ளது.
5.1.2 கிரியான் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெரிய பள்ளிகளில் ஒன்றாக இருந்துள்ளது.
5.1.3 செஸ் விளையாட்டில் மாநில அளவில் வெற்றிபெற்றுள்ளது.
5.2 முன்னாள் மாணவர்கள்:
5.2.1 திரு. டி. முருகையா—MISC பொறியியலாளர்.
5.2.3 எம்.சீனிவாகம் தலைமை சமையலதிகாரி—ஜாவி இன்(Jawi Golf)
5.2.4 டாக்டர் ந.முனியாண்டி, ஈப்போ
5.2.5 திரு. ந. முனுசாமி சிறப்பாசிரியர்—தலைமையாசிரியர், பினாங்கு மாநிலம்.
5.2.6 திரு. அன்பழகன் பெட்ரோனாஸ், பொறியிலளார்.
5.2.7 திரு. சு.ப. சற்குணன் ஆசிரியர் [இவர்போல் பலர் உள்ளனர்.]
தற்போது மேற்குக்கரைக் கடலோர நெடுஞ்சாலை திட்டத்தில் புதிதாகப் பாலம் அமைக்கப்பெற்றுள்ளதால், இப்பகுதியில் புதிய வீடமைப்புத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் மற்றுள்ள வசதிகளும் அதிகரிபதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக மறுபடியும் இப்பள்ளி பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுப்பதற்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது.