'இரப்பர்' நொய்வு மரத்தைத் தவிர புதிய மரஞ்செடிகள் எவற்றிலாவது இயற்கையான நொய்வு 'ரப்பர்' கிடைக்குமா என்று ஐம்பதாயிரம் தாவர வகைகளை எடிசன் சோதித்துப் பார்த்துவிட்டார். எதுவும் படன்படவில்லை.
"நம்முடைய ஐம்பதாயிரம் சோதனைகளுக்கு ஒரு பலனும் இல்லாமல் போய் விட்டதே!" என்று கூறி வருத்தப்பட்டார் அருகிலிருந்த நண்பர்.
எடிசன் அமைதியாகச் சொன்னார்; "ஏன் பலன் இல்லை? இந்த ஐம்பதாயிரம் மரம், செடிகளும் நொய்வு செய்யப் பயன்படாது என்பதைத் தெரிந்து கொண்டோமா? இல்லையா?" என்று வினவினார்.

No comments:
Post a Comment