Tuesday, 13 April 2010

ஆறு மரங்கள்! மூன்று நண்பர்கள்!

நண்பர்கள் மூன்று பேர், ஒரு மாந்தோப்புக்குச் சென்றார்கள். மாந்தோப்பில், ஆறு மரங்களில் மட்டுமே காய்கள் இருந்தன.அவற்றில் முறையே 62, 33, 38, 36, 32, 30, காய்கள் இருந்தன. மூன்றாம் நண்பன், ஒரு மரத்திலிருந்த காய்களை மட்டும் பறித்துக் கொண்டான். இரண்டாம் நண்பன், இரண்டு மரங்களில் உள்ள காய்களை பறித்துக் கொண்டான். முதல் நண்பன், மூன்று மரங்களில் உள்ள காய்களைப் பறித்துக் கொண்டான். ஒவ்வொருவரும் தாம் பறித்த காய்களை எண்ணிப் பாத்தனர். முதல் நண்பண்டம் நிறையக் காய்கள் இருந்தன. இரண்டாம் நண்பனிடம் இருந்த காய்கள், முதல் நண்பனிடம் இருந்த காய்களில் பாதி அளவே ஆகும். மூன்றாம் நண்பனிடம் இருந்த காய்கள், இரண்டாம் நண்பனிடம் இருந்த காய்களில் பாதி அளவே ஆகும். அப்படியானால், யார் யார் எந்தெந்த மரங்களிலிருந்து காய்களைப் பறித்தனர்? அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த காய்கள் எத்தனை?


விடை: 


முதல் நண்பன் முதல் மரம், மூன்றாம் மரம் ஐந்தாம் மரம் ஆகிய மூன்று மரங்களில் காய்களைப் பறித்தான். அவனிடம் இருந்த காய்கள் மொத்தம் 132 (62+38+32). இரண்டாம் நண்பன் நான்காம் மரம், ஆறாம் மரம் ஆகிய இரண்டு மரங்களில் காய்களைப் பறித்தான். அவனிடம் இருந்த காய்கள் மொத்தம்: 66 (36+30) இது முதல்வன் பறித்ததில் பாதி மூன்றாம் நண்பன் இரண்டாம் மரத்திலிருந்த காய்களைப் பறித்தான்; அவன் பறித்த காய்கள் மொத்தம் 33. இது இரண்டாமவன் பறித்ததில் பாதி.

No comments: