Showing posts with label பெருமக்களின் வாழ்வில். Show all posts
Showing posts with label பெருமக்களின் வாழ்வில். Show all posts

Thursday, 24 June 2010

பெர்னாட் சா

சுரங்கத் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் பெர்னாட் சாவும் கலந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். கூட்டத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டு விட்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஏதாவது பேசுமாறு பெர்னாட் சாவை வேண்டிக் கொண்டனர், கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணியவர்கள். சா எழுந்தார். மக்களின் கவனமும் பார்வையும் அவர் பக்கமே திரும்பின. சா சொன்னார்:

" சுரங்கத் தொழிலாளர்களுக்கு நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் கூறப் போகிறேன் அதை மட்டும் அவர்கள் நினைவில் கொண்டு நடந்தால் போதும். அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் மீண்டும் மீண்டும் கீழே போகாதீர்கள், மேலே ஏரி வாருங்கள் என்பதுதான்!"


நன்றி : கோகுலம்

Wednesday, 23 June 2010

கலீலியோ

தொலைநோக்கியைக் கண்டுபிடித்த கலீலியோ தன் கடைசிக் காலத்தில் ஓய்வு இல்லாமல் உழைத்தார், வான மண்டலத்தின் இரசியங்களையெல்லாம் கண்டறிந்து உலகிற்குச் சொன்ன கலிலீயோ, 1637- ஆம் ஆண்டு கண்பார்வை இழந்து குருடர் ஆனார். தமது நிலையை விளக்கித் தன் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினார்.


" நான் சீர்செய்ய முடியாதபடி முழுக் குருடனாக ஆகி விட்டேன். வானத்தையும், பூமியையும், அண்டத்தையும் அதிலுள்ள அழகையும் மக்களுக்கு விரிவுப் படுத்திக் காட்டிய நான் இப்போது பார்வை இழந்துவிட்டப்படியால் அவை யாவும் சுருங்கி சிறுத்து நான் இருக்கும் இடத்திற்குள்ளேயே அடங்கிப் போய் விட்டன. இயற்கையின் சித்தம் அதுவானல் அதுவே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்" என்றார்.

Thursday, 10 June 2010

எடிசன்

'இரப்பர்' நொய்வு மரத்தைத் தவிர புதிய மரஞ்செடிகள் எவற்றிலாவது இயற்கையான நொய்வு 'ரப்பர்' கிடைக்குமா என்று ஐம்பதாயிரம் தாவர வகைகளை எடிசன் சோதித்துப் பார்த்துவிட்டார். எதுவும் படன்படவில்லை.

"நம்முடைய ஐம்பதாயிரம் சோதனைகளுக்கு ஒரு பலனும் இல்லாமல் போய் விட்டதே!" என்று கூறி வருத்தப்பட்டார் அருகிலிருந்த நண்பர்.

எடிசன் அமைதியாகச் சொன்னார்; "ஏன் பலன் இல்லை? இந்த ஐம்பதாயிரம் மரம், செடிகளும் நொய்வு செய்யப் பயன்படாது என்பதைத் தெரிந்து கொண்டோமா? இல்லையா?" என்று வினவினார்.


Friday, 4 June 2010


''ஏறி தழை பறித்து வா" என்றார். ஆனந்தன் மரமேறி கைகொண்ட மட்டும் தழை பறித்துக் கொண்டு வந்து கௌதம புத்தமர் முன்னே நின்றான்.

" ஆனந்தா, கையில் என்ன இருக்கிறது?"

"தழை சுவாமி."

" மரத்தில் என்ன இருக்கிறது?"

" ஏரளாமான தழை சுவாமி."

" ஆனந்தா, உனக்கு நான் போதித்தது உன் கையில் உள்ள தழை அளவு: போதிக்காதது மரத்தில் உள்ள தழை அளவு. எனவே நீயேதான் நுகர்வத்தால்(அனுபவத்தால்) உலகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

நன்றி : கோகுலம்

Thursday, 3 June 2010

பாரதி

ஒரு முறை பாரதியார் திருவனந்தபுரம் சென்றிருந்த பொழுது, அங்கிருந்த விலங்கு காட்சியகத்திற்குச் சென்றார். அங்குள்ள எல்லா விலங்குகளையும் கைகளால் தொட்டுப் பார்க்கத் தொடங்கினார். பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லியும் கேட்கவில்லை. சிங்கத்தையும் புலியையுமாவது தொட வேண்டாம் என்று காவற்காரர் கேட்டுக்கொண்டார். பாரதியார் அதையும் கேட்காமல் " நீய விலங்கிற்கு அரசன். நான் கவி அரசன். உன்னைக் காண வந்திருக்கிறேன். நீ உன் முழக்கம் மூலம் உன் அன்பை எனக்குத் தெரியச் செய்" என்று சொல்லி, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தார். சிங்கமும் மகிழ்ந்து முழங்கிச் செய்து தன் அன்பை வெளிப்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் வியந்து நின்றனர்.

Wednesday, 2 June 2010

தந்தை பெரியார்

பெரியார் ஒருமுறை மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பெரியார் சென்று கொண்டிருந்த மகிழுந்து திண்டுக்கல் அருகே சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரை மகிழுந்தை நிறுத்தும் படி சொன்னார். மகிழுந்து நின்றதும், தொண்டர் ஒருவரிடம், சாலை ஓரத்தில் பெண் ஒருத்தி வடை சுட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, வடை வாங்கிவருமாறு சொன்னார். வடை வாங்கி வந்ததும் அதை அவர் சுவைத்துச் சாப்பிட்டதுடன் உடனிருந்தவர்களுக்கும் கொடுத்தார்.

Thursday, 27 May 2010

சாரா சேத்

செபியின் (Sapin) நாட்டு இசை மேதை சாரா சேத் 'வயலின்' வாசிப்பதில் ஈடு இணையற்றவராக விளங்கினார். ஒருமுறை அவர் வாசிப்பைக் கேட்டப் பத்திரிகையாளர் ஒருவர், "இவ்வளவு அருமையாக வாசிக்கிறீர்களே, இப்படிப்பட்ட வாசிப்பை என் வாழ்நாளில் இதுவரை கேட்டதே இல்லை. இந்தத் திறமை எப்படி உங்களுக்கு வந்தது?" என்று கேட்டார்.

அதற்கு சாராசேத், "என்னைப் போல் நீங்களும் இருப்பத்தைந்து ஆண்டுக்காலம் நாள்தோறும் எட்டுமணி நேரம் இடைவிடாமல் வாசித்தால் 'வயலின்' திறமையை மிக எளிதாகப் பெறலாம்" என்றார்.


நன்றி : கோகுலம்

பிகாசோ



ஓவியர் பிகாசோ, உலகப் போரில் சர்வாதிகாரி இட்லர் செய்த கொடுமைகளை ஓவியமாக வரைந்து கண்காட்சி வைத்திருந்தார்.

இட்லர் இதைப் பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். உடனே பிகாசோவை அழைத்து "இதெல்லாம் நீ செய்ததா?" என்று கோபத்துடன் கேட்டார்.

உடனே பிகாசோ அமைதியாக, " இல்லை இதெல்லாம் தாங்கள் செய்தவைதான். இதெல்லாம் தங்கள் கைவண்ணமே, என்னை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்?" என்றார். இட்லருக்குத் தன் தவறு புரிந்தது.

நன்றி : கோகுலம்

நொபு நோகா

சப்பான் நாட்டுப் படைத் தளபதி 'நொபு நோகா' பல போர்களைக் கண்டவர். திறமையான புத்திசாலி. ஒரு தடவை எதிரி நாட்டின் மேல் படையெடுத்துப்போன போது, எதிரியின் பலத்தையும், ஆயுதக் குவியலையும் கண்ட படை வீரர்கள், 'எதிரிகளை வெல்ல முடியுமா?' என்று ஐயம் கொண்டனர்.

உடனே நொபு நோகா, " அருகிலுள்ள புத்தர் கோவிலுக்குப் போய் பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் நாம்தான் வெற்றி பெறுவோ. பூ விழுந்தால் போரே வேண்டாம், திரும்பிப் போய் விடலாம்." என்றார். படை வீரர்களும் உடன்பட்டனர்.

கோவிலுக்குப் போய் நொபுநோகா காசைச் சுண்ட, தலை விழுந்தது. படை வீரர்கள் மகிழ்ச்சியுடன் ' வெற்றி பெறுவோம்' என்ற நம்பிக்கையுடன் போரிட்டு, வெற்றிக் களிப்போடு நாடு திரும்பினர். வெற்றி விழாவில் நொபுநோகா, " வெற்றியை நிர்ணயித்தது அந்தக் காசுதான்" என்றபடியே நாணயத்தை எடுத்துக் காட்ட, அதன் இரு பக்கமும் தலை விழுந்தது.

உடனே அவர், " வெற்றியை நிர்ணயிப்பது விதியல்ல. நம் நம்பிக்கையும் மன உறுதியும்தான். அது தான் உங்களைச் செயல்பட வைத்தது. அதனால்தான் நாம் வெற்றோம்"என்றார்.

நன்றி : கோகுலம்

ரைட் சகோதரர்கள்



வானுந்தைக் கண்டுப்பிடித்த ரைட் சகோதரர்கள் மிகுந்த கூச்ச பழக்கங் கொண்டவர்கள். மேடையில் பேசுவதென்றால் மிகவும் தயங்குவார்கள்.

ஒரு நாள் ரைட் சகோதரர்கள் ஒரு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசுவதற்கு மூத்தவரான வில்பர் ரைட்டை அழைத்தனர். வில்பர் ரைட்டுக்குத் தர்மசங்கடமாகப் போய் விட்டது. தன் இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்ற வில்பர், " எப்போதும் என் தம்பி ஆர்வில்தான் பேசுவது வழக்கம்" என்று கூறிவிட்டு இறங்கினார்.

அடுத்துப் பேசுவதற்கு இளையவரான ஆர்வில்லை அழைத்தபோது, " என்னுடைய அண்ணந்தான் ஏற்கனவே சொற்பொழிவு செய்து விட்டாரே. நான் வேறு எதற்கு..?" என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.


நன்றி : கோகுலம்

அலெசாண்டர்


பேரரசர் அலெசாண்டர் தம் படை வீரர்களுடன் போருக்குச் சென்றார். ஒரு பாலைவனத்தில் போர் வீரர்களுடன் தங்கினார். அனைவருக்கும் தண்ணீர் தாகம்.



அப்போது ஒரு வழிப்போக்கர் தோல்பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒட்டகத்தில் வந்தார். அரசர் “ இந்தத் தண்ணீரை யாருக்கு கொண்டு போகிறீர்கள் ? “ என்றார்.

அவர் “ எனது மனைவி மக்களுக்காகக் கொண்டு போகிறேன். நீங்களும் தாகம் தீருங்கள் “ என்று கூறி, தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.

அவர் அந்தத் தண்ணீரை உற்றுப் பார்த்தார். அத் தண்ணீரில் போர் வீரர்களின் முகங்கள் தெரிந்தன. உடனே, தண்ணீரை அவரிடமே கொடுத்து “ நீங்கள் கொண்டு போங்கள். இத்தண்ணீரை நான் மட்டும் குடித்தால் ஆயிரக்கணக்கான என் போர் வீரர்கள் தளர்ச்சியுற்று கீழே விழுந்து விடுவார்கள் “ என்று பேரரசர் கூறினார். இது அவரது போர் வீரர்களுக்குப் புதிய உந்துதலையும், புதிய சத்தியையும் கொடுத்ததில் வியப்பு இல்லை. ஒர் ஈகம் ஒரு வெற்றிக்கு அடித்தளம்.



நன்றி : கோகுலம்

காந்தி


காந்தி சென்னைக்கு வரும் போதெல்லாம் ஜி.ஏ. நடேசன் என்ற நாட்டு பத்தரது இல்லத்தில்தான் தங்குவார். ஒருமுறை அவ்வாறு தங்கியிருக்கும் போது அவரது பெண் குழந்தை காந்திக்கு அன்புப் பரிசாக ஒரு வரிசிலைக் (பென்சிலை) கொடுத்தாள். அதை காந்தி மிகவும் கவனமாக காத்து வந்தார்.

ஒரு நாள் சபர்மதி மடத்தில் காந்தி எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தார். நிரம்ப நேரம் தேடி அந்தப்பொருளைக் கண்டுபிடித்தார். எல்லாரும் ஏதோ முக்கியமான பொருளைத்தான் தேடிக் கொண்டிருந்தார் என்று நினைத்து அவர் அருகே சென்று பார்த்தால், அது அந்தக் குட்டிப் பெண் கொடுத்த வரிசில். " போயும் போயும் இதையா இவ்வளவு சிரமப்பட்டுத் தேடினீர்கள்?" என்று மடத்திலிருந்த அனைவரும் கேட்டார்கள், உடனே காந்தி " பொருளின் அளவைப் பார்க்காதீர்கள். அதைக் கொடுத்தவரது உள்ளத்திலுள்ள அன்பை மட்டும் பாருங்கள்" என்றார்.



நன்றி: கோகுலம்

Wednesday, 26 May 2010

ஓ சி மின்

கப்பல்கள் வரிசையாக நின்ற சைகோன் துறைமுகத்திற்குள் ஓர் இளைஞன் நுழைந்தான். தனக்குக் கப்பலில் ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டான். எலும்பும் தோலுமாய் இருந்த அவனுடைய உருவத்தைப் பார்த்த மாலுமி, "உனக்குக் கப்பலில் வேலையா?" என்று கலகலவென சிரித்தார். சற்றுத் சிந்தித்து "எந்த வேலையும் செய்வாயா?" என்றார், "எந்த வேலையும் பழகினால் செய்ய முடியும்" என்றான் அந்த இளைஞன். அந்தப் பதிலில் ஓர் உறுதி தொனித்தது. அவனுக்குச் சமையல் வேலை கொடுக்கப்பட்டது. தூங்குவதற்கான நேரம் கிடைத்தாலும் தூங்காமல் புத்தகங்களைப் படிப்பான்.

பிறகு தன்னுடைய அயராத உழைப்பால் வியட்நாம் நாட்டின் தலைவர் ஆனான் அந்த இளைஞன். அவர்தான் டாக்டர் ஓ சி மின். இன்றும் அவர் வியட்நாமின் நாட்டுத்தந்தை என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.

நன்றி : கோகுலம்

பாவலர் ஆவுடையார்

கவிஞர் ஆவுடையார் கோவிலுக்குக் கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு நண்பர், கவிஞருடைய பாடல்களை வெகு உரத்த குரலில் பாட ஆரம்பித்தார். உடனே கவிஞர், " தயவு செய்து பாரதியார் பாடல்களில் ஏதாவது பாடுங்களேன்!" என்று சொன்னார்.

" தங்கள் பாட்டுக்களை விடப் பாரதியார் பாடல்கள் மீது தங்களுக்கு ஏன் இத்தனை மோகம்?" என்று கேட்டார் நண்பர்.

அதற்குக் கவிஞர், " மோகம் என்பதற்காகச் சொல்லவில்லை. பாரதியார் இறந்து விட்டார். அவர் பாடல்களை எப்படி கொலை பண்ணினாலும் அவர் வருந்தப் போவதில்லை. அதற்காகத்தான் சொன்னேன்!" என்றார்.


நன்றி : கோகுலம்



சத்தியேந்திரநாத் போசு

சிறு வயதிலேயே கணிதத்தில் மிகவும் ஆர்வமுடையவரா இருந்தார் சத்தியேந்திரநாத் போசு. அவரது வகுப்பில் ஒருநாள் கணித ஆசிரியர் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தியேந்திரநாத் போசுக்கு மட்டும் நூற்றுக்கு நூற்றுப்பத்து மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தன.


தேர்வில் 11 கணக்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றைத் " தேர்வு" என விட்டு விடலாம். ஆனால் இவரோ 11 கணக்குகளையும் சரியாகச் செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கமாகப் போடும் வழிகளோடு, புதிய முறைகளையும் பயன்படுத்தி சரியான விடையை வரவழைத்திருந்தார்.


நன்றி : கோகுலம்