துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே
பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி
மண்டலத்தி லேபேர் வளநாட்டின் – மண்டுநீர்ப்பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்
சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்பேரவையி லேநூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப்
பாரரசு செய்ததமிழ்ப் பைந்தேவி
*தமிழ்விடுதூது
சுள்ளென்று எறிக்கும் சுடரோன்பால் தோன்றியுயிர்
உள்ளம் துலக்கி உலாவலின் – தெள்ளுபுகழ்ப்
பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ்
ஒண்டமிழ் என்மனார் போந்து
*பழம்பாடல்
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்நேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்நேர் இலாத தமிழ்
*தண்டியலங்கார உரைமேற்கோள்
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்
*வில்லிபாரதம்
வரலாற்றுமுறை தெரியாதிருந்த காலத்தில் தொன்ம(புராண)முறையில் தமிழைத் தற்காத்த சமயநெறித் தமிழ்ப்பெருஞ்சான்றோர்.

