Showing posts with label தகவல் தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தகவல் தொழில் நுட்பம். Show all posts

Monday, 23 August 2010

படப்பிடிப்பி (Screenshoter)

கணினித் திரையில் காணும் காட்சிகளைப் படமாகப் பெறுவதற்குப் பல செயலிகள் உள்ளன. (prnt Scrn) என்ற பொத்தானைக் கணினி விசைப்பலகையில் அழுத்திக் கூட திரைக்காட்சிகளைப் படமாகச் சேமிக்கலாம். இருப்பினும் இம்முறை நேரத்தை அதிகம் செலவிடும். இம்முறைக்கு மாற்றாகப் பல எளிய செயலிகள் உள்ளன. அவற்றில் பயன்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் கீழ்க்கண்ட Screenchoter செயலி மிக எளிதாகவுள்ளது.


இந்தச் செயலியை நாம் கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை. எவ்விடத்தில் வேண்டுமானாலும் நிலைபடுத்திக்கொள்ளலாம்; மாற்றிக்கொள்ளலாம். அளவு வெறும் 97.0 KB மட்டுமே. இதன் மேல் வைத்து இரட்டைச் சொடுக்குச் செய்தாலே போதும், கீழ்க்கண்ட திரை  தோன்றும்.

1. இப் பொத்தானை அழுத்தி, பிடிக்கப்படும் படங்களைச் சேமிக்கும் காப்புறையைத் தெரிவு
செய்யலாம்.


2. பட வடிவத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

3. முழுத்திரையையும் படம் பிடிக்கலாம் அல்லது வேண்டிய பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.

Monday, 10 May 2010

அழிவி தடுப்பி

கணினி, மடிக்கணினி, கைப்பேசி என எல்லா மின்னியல் கருவிகளிலும் அழிவி(virus) ஊடுருவல் நிச்சயமாக உண்டு. நம்மில் பலர் 'micrsoft windows' எனும் செயலியையே பயன்படுத்துகிறோம். அதனால் இந்த அழிவிகளின் தாக்குதல்கள் நிச்சயம் உண்டு. அதைத் தடுக்க மிகச் சிறந்த அழிவி தடுப்பி (anti virus)தேவையாகிறது. அழிவி தடுப்பி இல்லாமல் இணையத்தில் ஒரு மணி நேரம் உலாவினாலும் நம் கணினி முற்றிலும் செயல் இழந்து போகும் வாய்ப்பு உண்டு.

அழிவி தடுப்பி நிரலிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 'Kaspersky' நிருவனம் அண்மையில் அவர்களின் புதிய நிரலியைச் சந்தையில் அறிமுகம் செய்தது. இது தங்கள் கணினியின் பாதுகாப்பை 100%ற்குக் காக்கும் என்பதை உறுதியளிக்கிறது. இதன் பெயர் 'Kaspersky PURE' என்பதாகும்.

அழிவி பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, கடவுச் சொல் பாதுகாப்பு என பல்வகை சிறப்புக் கூறுகளை அடக்கியுள்ளது. சுருக்கமாக இப்படி அமைகிறது.
+=
விலை=  3 கணினி + ஓர் ஆண்டு = RM 318.88.

இதைப் பதிவிறக்கம் செய்து 30 நாட்களுக்கு இலவயமாகப் பயன்படுத்தலாம். இதற்கு முன் 'அவிராவின்' இலவய அழிவி தடுப்பியைப் பயன்படுத்தினேன். மிகக் கொடிய அழிவி தாக்குண்ட போழ்து 'அவிரா' தன் குடையை மடக்கிக்கொண்டது. பின் என் கணினி செயலிழப்பிலிருந்து 'கசுபெர்சுகாய் பியோ' வே காப்பாற்றியது.

30 நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு இச் செயலி தங்களுக்கு நிறைவளிக்குமாயின் பணம் செலுத்தி இதை வாங்கிக் கொள்ளலாம். 30 நாளுக்குப் பிறகும் இச் செயலி(trial version) முழுமையாக இயங்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து இச் செயலியை மேம்படுத்துவதிலிருந்து (update) தவிர்க்கப்படுவீர். இருப்பினும் 30 நாளுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் 30 நாளைப் புதுபிக்கும் வழியும் உண்டு. மிக அவசியம் நேர்ந்தால் இதைப் பயன்படுத்தலாம்.