Wednesday, 7 April 2010

தேசியத் தலைவர்களுக்கு மரியாதை செய்யும் கோவில்கள்

கோவில் கோபுரங்களில் பல்வேறு சிற்பங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் காந்தி, நேரு, சுபாசுசந்திரபோசு போன்ற தேசியத் தலைவர்களின் சிலைகளைக் கோபுரங்களில் பார்த்திருக்கிறீர்களா? மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருட்டிணன் என்ற வைணவ கோவில் கோபுரத்தில் காந்தி, கசுதூரிபாய் சிலையுடன் நேரு சிலையும், சுபாசுசந்திர போசு சிலையையும் காணலாம். வேறு எந்த கோவிலும் இப்படிக் கிடையாது. புதுவை உப்பளம் நேதாசி நகரிலுள்ள சிறீ தேசமுத்து மாரியம்மன் கோவில் ஆலய முகப்பில் பாரதியாருக்குச் சிலை வைத்துள்ளனர். இக்கோவில் பாரதியால் பாடல் பெற்ற தலம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலின் மதில் உயரத்தில் காந்தியாருக்கும், சவர்லால் நேருவுக்கும் சிலை இருக்கும் ஒரே கோவில், தமிழ்நாட்டில் அய்யம்பாளையம் எனும் ஊரிலுள்ள முத்தாலம்மன் கோவில்தான்.

No comments: