
அழகுற பாடி பரிசில் பெறுவார்!
சுழலும் புனலில் துள்ளும் மீன்கள்
அனலில் வேகும்!
படைபெருக தடை முறியும்
கடை பெருக பொருள் குவியும்!
அரலும் பிள்ளை அலறும்
அலறல் நெஞ்சைக் கிளறும்!
மெய்த்து பொய்க்கும்
பொத்து மெய்க்கும்
பெய்யும் மெய்யா மழை!
நிலை குலைந்து தலைகுனிந்து
களை இழந்து ஓடினான்!
கருவிழி சுழலும் இருமனம் உருளும்
ஒரு மொழி மருகும் வாய்க்குள்ளே!
இட்டது பட்டது புறம்
கற்றது கேட்டது அகம்!
பரிபாயும் தெருவிலே
எரிபாயும் சருகிலே!
தவளை வாயில் பூச்சி
பாம்பு வாயில் தவளை!
கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் சீறும்!
கதலி அலறும் கழனி கதறும்
சுத்தும் காற்றும் நிக்குமா?
குதிர் முழுக்க நெல்லு
புதிர் முழுக்க முள்ளு!
கோரை புல்லில் சாரை
கீரியைப் பார்த்துச் சீறும்!
சேத்துக்குள்ளே சின்ன புள்ள
தத்தித் தத்திச் சிக்கிக் கிச்சு!
No comments:
Post a Comment