
ஒரு நாள் ரைட் சகோதரர்கள் ஒரு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசுவதற்கு மூத்தவரான வில்பர் ரைட்டை அழைத்தனர். வில்பர் ரைட்டுக்குத் தர்மசங்கடமாகப் போய் விட்டது. தன் இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்ற வில்பர், " எப்போதும் என் தம்பி ஆர்வில்தான் பேசுவது வழக்கம்" என்று கூறிவிட்டு இறங்கினார்.
அடுத்துப் பேசுவதற்கு இளையவரான ஆர்வில்லை அழைத்தபோது, " என்னுடைய அண்ணந்தான் ஏற்கனவே சொற்பொழிவு செய்து விட்டாரே. நான் வேறு எதற்கு..?" என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.
நன்றி : கோகுலம்
No comments:
Post a Comment