Saturday, 7 August 2010

அண்ணா பல்கலைக்கழகத்தின் அகராதி


அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை முயற்சியில் அகராதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சில தனிச்சிறப்புபொடு இந்த மின் அகராதி மிளிர்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலச் சொல்லிருக்கும் அவ்வாறே அங்கிலத்திலிருந்து தமிழ்ச் சொல்லிருக்கும் பொருள் தேடலாம்.

ஆங்கில மின் அகராதிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில சிறப்புக் கூறுகளை    இவ்வகராதி கொண்டுள்ளது. அவை முறையே



1. வேற்றுமை உருபு, சொல்லுருபு, அடை போன்றவற்றை உள்ளிட்டு சொல்லைத் தேடினாலும் இது தானாகவே அச்சொல்லின் அடிச்சொல்லைக் கண்டு பிரித்து, அச்சொல்லுக்கான பொருளை நமக்கு தேடித்தரும். இக்கூறைக் கொண்ட முதல் அகராதி இதுவே.

2. நாம் உள்ளிட்ட அடிச்சொல்லொடு வேற்றுமை உருபுகளையும் இணைத்து முன் மொழியும்.

3. நாம் உள்ளிட்ட சொல்லில் அமைந்த குறள், ஔவையார் பாட்டு, பாரதியார் பாட்டு, திரைப்பாடல் ஆகியவற்றையும் முன் மொழியும். இது தனிச்சிறப்புடைய கூறு எனலாம்.

4. நாம் தேடிய சொல்லுக்குத் தொடர்புடைய பிற சொற்களையும் முன் மொழியும்.

5. 2 இலக்கத்திற்கும் மேலான தமிழ், ஆங்கிலச் சொல்லைக் கொண்டுள்ளது.

அகரதியைக் காண இங்கே சொடுக்குக.

No comments: