ஒருவன் ஒரு பசுக் கூட்டத்தை, அடுத்த ஊர் சந்தைக்கு ஓட்டிச் சென்றான்.
வழியில், மூன்று வயல் இருந்தன. பசுக்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்து, அந்த வயல்களில் மேய்ந்தன. அப்போது, ஒவ்வொரு பிரிவிலும் இருந்த பசுக்களின் தொகை ஒற்றைப்படையில் இருந்தது.
வயல்களுக்கு அருகே, ஏழு குளங்கள் இருந்தன. வயல்களில் வயிறார மேய்ந்த பசுக்கள் ஏழு பிரிவாகப் பிரிந்து, ஏழு குளங்களில் நீர் குடித்தன. அப்போதும், ஒவ்வொரு பிரிவில் இருந்த பசுக்களின் தொகை ஒற்றைப்படையில் இருந்தது.
குளங்களுக்கு அருகே ஒன்பது அரச மரங்கள் இருந்தன. நீர் குடித்த பசுக்கள் ஒன்பது பிரிவாகப் பிரிந்து, ஒன்பது மரநிழலில் இளைப்பாறின. அப்போதும், ஒவ்வொரு பிரிவிலும் இருந்த பசுக்களின் தொகை, ஒற்றைப் படையிலேயே இருந்தது.
அப்படியானால், பசுக்கூட்டத்தில் இருந்த பசுக்கள் மொத்தம் எத்தனை?
63 பசு
No comments:
Post a Comment