Monday, 23 August 2010

படப்பிடிப்பி (Screenshoter)

கணினித் திரையில் காணும் காட்சிகளைப் படமாகப் பெறுவதற்குப் பல செயலிகள் உள்ளன. (prnt Scrn) என்ற பொத்தானைக் கணினி விசைப்பலகையில் அழுத்திக் கூட திரைக்காட்சிகளைப் படமாகச் சேமிக்கலாம். இருப்பினும் இம்முறை நேரத்தை அதிகம் செலவிடும். இம்முறைக்கு மாற்றாகப் பல எளிய செயலிகள் உள்ளன. அவற்றில் பயன்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் கீழ்க்கண்ட Screenchoter செயலி மிக எளிதாகவுள்ளது.


இந்தச் செயலியை நாம் கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை. எவ்விடத்தில் வேண்டுமானாலும் நிலைபடுத்திக்கொள்ளலாம்; மாற்றிக்கொள்ளலாம். அளவு வெறும் 97.0 KB மட்டுமே. இதன் மேல் வைத்து இரட்டைச் சொடுக்குச் செய்தாலே போதும், கீழ்க்கண்ட திரை  தோன்றும்.

1. இப் பொத்தானை அழுத்தி, பிடிக்கப்படும் படங்களைச் சேமிக்கும் காப்புறையைத் தெரிவு
செய்யலாம்.


2. பட வடிவத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

3. முழுத்திரையையும் படம் பிடிக்கலாம் அல்லது வேண்டிய பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.




4. 'option' எனும் தெரிவு பகுதிக்குச் சென்று படிக்கப்படும் படத்தின் தரத்தையும் தெரிவு செய்யலாம்.

'Area' தெரிவு செய்து பின்னர் 'set' பொத்தானைச் சொடுக்கும் போது, உங்களுக்குத் திரையில் தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்து கொண்டு 'Screenshot' என்ற பொத்தானை ஒரு முறை அழுத்தினால் போதும். படம் பிடித்துச் சேமிக்கப்படும்.

காட்டாக கீழ்க்காணும் படத்தைக் காண்க.


No comments: