யானையின் தந்தம் வெள்ளைநிறம் தானே! ஆப்பிரிக்காவில் சில யானைகளுக்குக் கருப்புத் தந்தங்கள் உள்ளனவாம். யானைத் தோலின் கனம் 2 செ.மீ.

சிங்கத்தின் எடை 500 பவுண்டு! 12 அடி உயரத்திலும் 40 அடி பள்ளத்திலும் தாவக் கூடிய ஆற்றல் பெற்றது சிங்கம். மிகவும் சிறிய இதயம் கொண்ட விலங்கும் சிங்கமே!
கங்காரு தூய விலங்கு! புல்லையும் இலைகளையும் மட்டுமே தின்று அவை வாழ்கின்றன.
மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சுறா மீன்கள் நீரில் செல்லும். தண்ணீரில் ஐந்து கி.மீ. பரப்பளவுக்குள் எங்கே இறைச்சிவாடையோ அரத்த(இரத்தம்) வாடையோ இருந்தாலும் மோப்ப சத்தி மூலம் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவை. சுறாக்களின் 300 வகை உள்ளன. இவற்றுள் 30 வகை மட்டுமே மனிதர்களைத் தாக்குகின்றன.
வௌவாலில் ஆயிரம் இனங்கள் உள்ளன. வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லை. ஒரு நாளில் 20 மணி நேரத்தைத் தூங்கியே கழிக்கின்றன. இரத்தம் குடிக்கும் வௌவால்களும் உண்டு.
வாத்து இனத்தில் வாலை வைத்து ஆண், பெண் எனக் கண்டு பிடிப்பர். ஆண் வாத்து அதிகமாகக் கொக்கரிக்கும். பெண் வாத்து அமைதியாக இருக்கும்.


.jpg)
.jpg)
1 comment:
கருப்பு நிற தந்தமா...? தகவல் அருமை!
Post a Comment